புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 5 நவம்பர் 2017 (10:30 IST)

கடன் தள்ளுபடி செய்யவில்லை என்று கமல் கூறியது உண்மையா?

நடிகர் கமல்ஹாசன் நேற்று விவசாயிகள் மத்தியில் பேசியபோது மற்ற மாநிலங்களில் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது, ஆனால் தமிழகத்தில் மட்டும் கடன் தள்ளுபடி செய்யப்படுவது இல்லை என்று குற்றஞ்சாட்டினார்



 


ஆனால் இந்த கூற்று உண்மையில்லை என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 6000 கோடி விவசாயிகளின் கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது. அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்வது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. எனவே கமல்ஹாசனின் கருத்து தவறானது என்று கூறி வருகின்றனர்.

விவசாயிகளின் நலனுக்காக தன்னிடம் உள்ள ஐந்து லட்சம் நபர்களை அனுப்புவதாக கூறும் கமல், கடந்த பல வருடங்களாக விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்தபோது எங்கே சென்றிருந்தார் என்று அவர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.