புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 4 நவம்பர் 2017 (17:50 IST)

இந்து தீவிரவாத விவகாரம்: வாரணாசி நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால் கமல் அதிர்ச்சி

நடிகர் கமல்ஹாசன் வார இதழ் ஒன்றில் எழுதிய தொடரில் இந்து தீவிரவாதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனமும், ஆதரவும் தெரிவித்து வந்த நிலையில் கமல் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் கமலேஷ் என்பவர் வாரணாசி நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது


 


இந்த நிலையில் சற்றுமுன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கமல் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும் இந்த வழக்கை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

வழக்கறிஞர் கமலேஷ் தாக்கல் செய்த மனு இன்று தள்ளுபடி செய்யப்படும் என கமல் மற்றும் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் வழக்கை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதால் கமல் தரப்பு அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.