1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 11 ஜூன் 2023 (14:44 IST)

வரும் காலத்தில் ஒரு தமிழரை பிரதமராக்குவோம்: அமித்ஷா

Amitshah
வருங்காலத்தில் ஒரு தமிழரை பிரதமராக்குவோம் என பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மத்திய உள்துறை அமைச்சர் இன்று தமிழகம் வருகை தந்தார் என்பதும் சென்னை வந்த அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. 
 
சென்னை கிண்டியில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்த அமைச்சர் அமித்ஷாவை, திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி பிரபலங்கள் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருந்து இரண்டு பிரதமர்களை நாம் தவற விட்டுள்ளோம் என்றும், ஆனால் வரும் காலங்களில் ஒரு தமிழரை கண்டிப்பாக பிரதமராக்க உறுதி எடுப்போம் என்று பாஜக நிர்வாகி கூட்டத்தில் பேசினார். 
இரண்டு முறை பிரதமர் வேட்பாளரை தமிழகம் இழந்ததற்கு காரணம் திமுக தான் என்று பாஜக நிர்வாக கூட்டத்தில் அமைச்சர் பேசியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
மேலும் தமிழகம் இருளில் உள்ளதை மின்தடை காட்டுகிறது என்றும் தமிழகத்திற்கு வெளிச்சத்தை கொண்டுவர பாஜக பாடுபடும் என்றும் தெரிவித்தார். நான் சென்னை விமான நிலையம் வந்தவுடன் மின்சாரம் போனது எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva