1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 11 ஜூன் 2023 (08:55 IST)

அமித்ஷா வருகையின்போது மின்வெட்டு, அரசியல் செய்ய விரும்பவில்லை: அண்ணாமலை

மத்திய உள்துறை அமைச்சர் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது திடீரென சாலையில் இருந்த மின் விளக்குகள் அணைந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகார குறித்து அரசியல் செய்ய விரும்பவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் 
 
இந்தியாவில் பிரதமருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வந்தபோது விமான நிலையத்திலிருந்து காரில் அவர் வந்தபோது திடீரென சாலையில் உள்ள மின்விளக்குகள் அணைந்தன. 
 
இதற்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்து அண்ணாமலை தனது கருத்தை தெரிவித்துள்ளார். மின் நிறுத்தம் குறித்து அரசியல் செய்ய விரும்பவில்லை என்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையின் போது மின்தடை ஏற்பட்டது குறித்து தமிழக அரசு குற்றம் சுமத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார். 
 
அடுத்த முறை இதனை நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை என்றும் சென்னை கிண்டியில் அமைச்சர் அமித்ஷாவுடன் சந்திப்புக்கு பின்னர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் முற்றுப்பு ள்ளி
 
Edited by Siva