திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 5 மார்ச் 2022 (17:32 IST)

முதல்வர் தலைமையில் முக்கிய மாநாடு: 3 நாட்கள் நடைபெறும் என தகவல்!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் முக்கிய அதிகாரிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ள மாநாட்டில் மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறை உயரதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மார்ச் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது 
 
மேலும் இந்த மாநாட்டில் முதல்முறையாக வனத்துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.