வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 20 ஜூன் 2024 (10:59 IST)

சுயமரியாதை முக்கியம்.. இனிமேல் பாஜகவில் பயணிக்கும் எண்ணம் இல்லை: திருச்சி சூர்யா

tiruchy surya shiva
தமிழக பாஜகவில் உள்ள அனைத்து பொறுப்புகளில் இருந்தும் திருச்சி சூர்யாநீக்கப்படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இனிமேல் பாஜகவில் பயணிக்கும் எண்ணம் இல்லை என்று திருச்சி சூர்யா கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
அண்ணன் அண்ணாமலை அவர்களால்  ஈர்க்கப்பட்டுதான் நான் தமிழ்நாட்டு பாஜகவில் இணைந்தேன். என் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் தலைவனை பேசியதற்கு நான் பதில் அளித்தேன், அதற்காக என்மேல் நடவடிக்கை என்றால் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்.
 
எந்த நிலையிலும் அண்ணன் அண்ணாமலை குடும்பத்தில் ஒருவனாகவே இருப்பேன்.  இனியும் தமிழ்நாடு பாஜகவில் பயணிக்கும் எண்ணம்  எனக்கு இல்லை. சுயமரியாதை முக்கியம். எதன் பொருட்டும் அதை கைவிட முடியாது. என் மீது அன்பு கொண்டு எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் எனது அன்பான நன்றிகள்
 
Edited by Mahendran