வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 10 செப்டம்பர் 2022 (13:52 IST)

மின் கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது கண்டனத்திற்குரியது- டிடிவி. தினகரன்

dinakaran
தமிழக அரசு மின் கட்டண உயர்வு அமல்பத்தியதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில், தமிழகத்தில் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 2மாதங்களுக்கு ரூ.27.50 உயர்த்த பரீசீலிக்கப்பட்டுள்ளதாகவும், 2 மாதங்களில் 301-400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.147.50 உயர்த்த பரிசீலனைசெய்யப்பட்டுள்ளதாகவும்,2 மாதங்களில் 501-600 யூனிட்கள் பயன்படுத்துவோருக்கு ரூ.155உயர்த்த பரிசூலிக்கப்பட்டுள்ளதாகவும், 2 மாதங்களில் 601-700 யூனிட்கள் பயன்படுத்துவோருக்கு ரூ.275 உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இதற்கு எதிர்காட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவது உறுதி என அமைச்சர் தெரிவித்தார்.

இதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இன்று முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

இதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கண்டம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த பிறகும், தமிழகத்தில் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியதுஒவ்வொரு குடும்பங்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும். வீட்டு வாடகை, கடை வாடகை போன்றவை உயர்வதற்கும், ஏற்கனவே நெருக்கடியிலிருக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மேலும் நெருக்கடிக்கு ஆளாவதற்குமே மின் கட்டண உயர்வு வழிவகுக்கும்மனசாட்சியோடு யோசித்துப் பார்த்திருந்தால் தி.மு.க அரசுக்கு இதெல்லாம் புரிந்திருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.