வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 22 ஜூன் 2024 (13:20 IST)

விஷ சாராயத்தை முதலில் குடித்தது சாராய வியாபாரி தந்தை தான்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

கள்ளக்குறிச்சியில் சாராயத்தில் மெத்தனால் கலந்திருப்பதாக எச்சரித்தும் விற்பனையை கன்னுக்குட்டி தொடர்ந்ததாக விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வீட்டில் விற்பனைக்கு வைத்திருந்த விஷ சாராயத்தை சாராய வியாபாரி ராமரின் தந்தை தான் முதலில் குடித்திருக்கிறார் என்றும், தந்தை உயிருக்கு போராடியதை பார்த்ததும் தன்னிடமிருந்த மெத்தனால் சாராயத்தை ராமர் அழித்துவிட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் மெத்தனால் கலந்திருப்பதை உணர்ந்த ராமர் சக வியாபாரிகளான கன்னுக்குட்டி உள்ளிட்டவர்களை எச்சரித்துள்ளார். கன்னுக்குட்டி தவிர மற்ற அனைவரும் தாங்கள் வைத்திருந்த விஷச் சாராயத்தை கீழே கொட்டி விட்டதாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் கன்னுக்குட்டி மட்டும் விஷச்சாராயத்தை கீழே கொட்டாமல் தன்னிடமிருந்த 330 லிட்டர் விஷச் சாராயத்தில் 250 லிட்டர் வரை விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த 250 லிட்டர் சாராயத்தை குடித்தவர்கள் தான் தற்போது பலியானவர்கள் மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran