வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 25 அக்டோபர் 2018 (14:33 IST)

15 நாள் பரோலில் வெளியே வருகிறார் இளவரசி.....

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் உறவினர் இளவரசி பரோலில் வெளியே வர இருக்கிறார்.

 
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, அவரின்  உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு 4 வருடங்கள் தண்டனை விதிக்கப்பட்டு நால்வரும் பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 
 
இதில், சசிகலா  மட்டும் 2 முறை பரோலில் வெளியே வந்து சென்றார். அதுவும் 2வது முறை அவரின் கணவர் நடராஜன் இறந்த போது 15 நாட்கள் பரோலில் வந்தவர், பரோல் முடியும் முன்பே சிறைக்கு கிளம்பி சென்றார். 
 
அதேபோல், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது சகோதரரை பார்க்க 15 நாட்கள் பரோல் கேட்டு இளவரசி விண்ணப்பித்திருந்தார். இந்த பரோல் மனு அதிகாரிகளின் பரிசீலனையில் இருக்கிறது என சிறை வட்டாரம் தெரிவித்தது.
 
இந்நிலையில், அவருக்கு 15 நாட்கள் பரோல் கொடுத்து சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. எனவே, எந்த நேரத்திலும் அவர் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.