1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 16 ஏப்ரல் 2025 (15:13 IST)

245 சதவீதம் வரி.. என்ன பண்ணப் போறீங்க? - சீனாவை சீண்டிய அமெரிக்கா!

US China Trade war

அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக போர் வலுப்பெற்று வரும் நிலையில் சீனாவுக்கு 245 சதவீதம் வரியை விதித்து அறிவித்துள்ளது அமெரிக்கா.

 

அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பை அமல்படுத்தியுள்ள நிலையில் சீனாவிற்கு அதிக வரிகளை விதித்துள்ளது. இதனால் சீனாவும் பதிலுக்கு அமெரிக்காவிற்கு வரிவிதிப்பு போட இரு நாடுகளிடையே வர்த்த மோதல் எழுந்துள்ளது. இதில் அமெரிக்கா சீனாவுக்கு 145 சதவீதம் வரியை விதித்த நிலையில், பதிலடியாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கனிமப் பொருட்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது சீனா. மேலும் அமெரிக்காவின் போயிங் விமானங்களை வாங்க சீன விமான நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

சீனா கொடுத்து வரும் இந்த நெருக்கடியை தொடர்ந்து முன்னதாக 145 சதவீதமாக விதிக்கப்பட்டிருந்த வரியை 245 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது அமெரிக்கா. வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் “சீனாவின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு பதிலடியாக அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களுக்கு இனி 245 சதவீதம் வரி விதிக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தொடரும் இந்த மோதலில் அடுத்து சீனா என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K