வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 30 மே 2020 (14:25 IST)

ரேசன் கார்டு இருந்தால்…கூட்டுறவு வங்கிகளில் ரூ.50 ஆயிரம் கடன் – செல்லூர் ராஜூ

கொரோன வைரஸால்  20,246 பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை 11313 பேர் குணமடைந்துள்ளனர். சுமார் 154 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மதுரையில் மாடக்குளம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு  கபசுர குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகளை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

முதல்வரின் உத்தரவுப்படி கூட்டுறவு வங்கிகளில் கடன் வசதியைப் பெற எளிமையாக்கப்பட்டுள்ளது. மேலும் குடும்ப அட்டையை காட்டி ( ரேசன் கார்டு ) ரூ. 50 ஆயிரம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.