1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 7 ஜூலை 2018 (16:24 IST)

பெண்ணின் சடலத்தில் இருந்த 20 பவுன் நகை திருட்டு

வேலூர் மாவட்டத்தில் இறந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 20 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த வசந்தா என்பவர் மாரடைப்பால் இறந்து போனார்.
 
இதனையடுத்து வசந்தாவின் உறவினர்கள், இறுதியில் வசந்தா வாங்கி வைத்திருந்த நகையை அவரது சடலத்தி மீது அணிவித்திருந்தனர். துக்க வீட்டிற்கு வந்த ஏராளமான பெண்கண் வசந்தாவின் சடலத்தை அணைத்தபடி அழுதுச் சென்றனர்.
 
சிறிது நேரம் கழித்து பார்த்தபோது , வசந்தாவின் கழுத்தில் அணிவித்திருந்த நகையை காணவில்லை. துக்க நிகழ்ச்சிக்கு வந்த யாரோ தான் இந்த செயலை செய்திருக்க வேண்டும் என அவர்கள் கருதினர்.
 
இதுகுறித்து வசந்தா குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் நகையை திருடிய செய்த  பெண்ணை தேடி வருகின்றனர். வசந்தா இறந்த துக்கத்தோடு 20 பவுன் தங்கச் சங்கிலி திருடுபோன சம்பவத்தால் அவரின் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.