1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 14 ஜூன் 2018 (22:52 IST)

18 தொகுதிகளில் இடைத்தேர்தல் வந்தால் கமல்-ரஜினி நிலை என்ன?

18 எம்.எல்.ஏக்களின் வழக்கு மூன்றாவது நீதிபதியிடம் சென்றிருக்கும் நிலையில் விரைவில் இந்த வழக்கின் முடிவு தெரியும் என்று நம்பப்படுகிறது. தற்போதைய அதிமுகவின் ஆட்சி முடிவு நாள் எண்ணப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில் 18 எம்.எல்.ஏக்களின் நீக்கம் செல்லும் என்று மூன்றாவது நீதிபதி தீர்ப்பளித்தால் அந்த தொகுதிகளுக்கு அடுத்த ஆறு மாதங்களில் தேர்தல் நடைபெறுவது உறுதி
 
இந்த நிலையில் ஒருவேளை அந்த 18 தொகுதிகளில் தேர்தல் நடந்தால் ரஜினி, கமல் கட்சியினர் போட்டியிடுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ரஜினிகாந்த் ஏற்கனவே வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று கூறியுள்ளார். இடைத்தேர்தல் வந்தால் அவர் போட்டியிடுவதாக கூறவில்லை. மேலும் அவர் இன்னும் கட்சியை முறையாக அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே 18 தொகுதிகளில் தேர்தல் வந்தால் ரஜினி போட்டியிடுவது சந்தேகம் என்றே கூறப்படுகிறது.
 
ஆனால் கமல்ஹாசன் நிலைமை அப்படியல்ல. கட்சி ஆரம்பித்து போராட்டம், பொதுக்கூட்டம் என அவர் களத்தில் இறங்கிவிட்டதால் போட்டியிட்டே ஆகவேண்டும் என்ற நிலையில் உள்ளார். பொதுவாக இடைத்தேர்தல் என்றால் அதில் ஆளும் கட்சியின் ஆதிக்கம் அதிகம் இருக்கும். மேலும் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியான திமுக, பணம்பலம் வாய்ந்த தினகரன் கட்சி ஆகிய மூன்று கட்சிகளை சமாளிக்கும் அளவுக்கு அவரது கட்சி தயாராக இருக்கின்றதா? என்பது சந்தேகம் எனவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எது எப்படியோ, ஒருவேளை 18 தொகுதிகளுக்கு தேர்தல் என்று அறிவிக்கப்பட்டால் ரஜினி, கமல் என்ன முடிவெடுக்கின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்