வெற்றி பெற்றால் மத்திய அமைச்சர்: புதிய கனவில் ஏ.சி.சண்முகம்?
வேலூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றால் தனக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறிய அந்த தொகுதியின் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான நிலையை மக்கள் எடுத்தான் எடுத்ததால்தான் திமுகவிற்கு அதிக அளவிலான வெற்றி கிடைத்தது. ஆனால் தற்போது மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால் இனிமேலும் திமுகவுக்கு வாக்களித்து கூடுதலாக ஒரு எம்பியை அளிப்பதால் எந்தவித பிரயோஜனமும் இல்லை என்று மக்கள் நினைத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது
இதனையடுத்து அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏசி சண்முகம் தான் வேலூர் தொகுதியில் வெற்றி பெற்றால் தனக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்றும் அதனை வைத்து வேலூரை நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் பிரச்சாரம் செய்து வருகிறாராம்
ஏற்கனவே 100 கோடிக்கு மேல் வேலூர் தொகுதிக்காக ஏசி சண்முகம் செலவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் இன்னும் அதிக செலவு செய்யவும் தயாராக இருக்கின்றாராம். இந்த தொகுதியில் எப்படியும் வெற்றி பெற்று பாஜக அமைச்சரவையில் சேர வேண்டும் என்ற முடிவுடன் அவர் இருப்பதாக கூறப்படுகிறது
மேலும் ஏசி சண்முகம் அவர்களை ஜெயிக்க வைக்க பாஜக தலைவர்களும் பிரச்சாரத்துக்கு வருவார்கள் என்று தெரிகிறது. குறிப்பாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்பட பல முக்கிய பாஜக தலைவர்கள் நமக்கு தமிழகத்திற்கு வந்து பிரச்சாரம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த தேர்தலில் ஏசி சண்முகம் வெற்றி பெற்றால் அதிமுகவுக்கு கூடுதலாக ஒரு எம்பி கிடைப்பது மட்டுமின்றி திமுக கிடைத்த வெற்றி, பாஜகவுக்கு எதிராக மக்கள் எடுத்த முடிவினால் கிடைத்த வெற்றி என்பதை நிரூபிக்கலாம் என்பதும் அதிமுகவினரின் எண்ணமாக உள்ளது
இருப்பினும் இந்த தொகுதியில் இஸ்லாமியர்கள் வாக்குகல் அதிகமாக இருப்பதால் அவர்கள் பாஜக கூட்டணி வேட்பாளரான ஏ சி சண்முகம் அவர்களுக்கு வாக்களிப்பார்களா என்பது சந்தேகமே. ஆனால் பணம் பாதாளம் வரை பாயும் என்பதால் ஏசி சண்முகம் நோக்கி நெருங்கி வருவதாக கூறப்படுகிறது