திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 26 அக்டோபர் 2018 (17:57 IST)

கூவத்தூர் ரகசியத்தை வெளியிடுவேன் : எம்.எல்.ஏ.கருணாஸ்

சென்ற மாதம் தமிழக முதல்வர் மற்றும் காவல் ஆணையரை தாக்குறைவராக விமர்சித்ததற்காக சென்னை எழுப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட கருணாஸுக்கு எழும்பூர் நீதிமன்றன் ஜானீன் கொடுத்ததியடுத்து அவர் தினம் தோறும் திருவல்லிக்கேணி நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் கையெழுத்து இட்டு வந்தார்.
இந்நிலையில் தேவர் பூஜையில் கலந்து கொள்ள விருப்பதால் வரும் 27ஆம்தேதி முதல் 30 ஆஅம் தேதி வரை திருவல்லிக்கேணி ,நுங்கம்பாக்கம் காவல்நிலையங்களில் கையெழுத்திட விலக்கு அளிக்குமாறு எம்.எல்.ஏ.கருணாஸ் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் 14வது நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
 
இதனையடுத்து இந்த மனு மீது வெள்ளிகிழமை பிற்பகல் வேளையில் வழக்கை விசாரித்த மாஜிஸ்ட்ரேட் ரோஸ்லின் துரை கருணாஸுக்கு 27 ஆம்தேதிமுதல் 30 ஆம்தேதிவரை திருவல்லிக்கேணி நுங்கம்பாக்கம்காவல் நிலையங்களில் ஆஜராகி கையெழுத்திடுவதில் இருந்து விலக்கு அளித்துள்ளார்.
 
பின்பு நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த கருணாஸ் செய்தியாளர்களிடம் ’எப்போது வேண்டுமானலும் கூவத்தூர் ரகசியத்தை வெளியிடுவேன் ’இவ்வாறு அவர் கூறினார்.