செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 30 மே 2022 (17:40 IST)

ஆடைகளை விற்றாவது கோதுமை விலையைக் குறைப்பேன்- பாகிஸ்தான் பிரதமர்

pakistan pm 2
பாகிஸ்தான் நாட்டில்  பிரதமர் ஷபாஸ் ஷெரிப் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இலங்கையில் ஏற்பட்டதுபோல் தற்போது அண்டை  நாடான பாகிஸ்தானிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, கைபர்  பாக்துன் குவா மாகாணத்தில்  கோதுமை மாவின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதற்கு  பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவாது:

கைபர் பாக்துங்குவா மாகாண முதல்வர் 24 மணி நேரத்திற்குள் கோதுமை மாவின் விலையை ரூ.400க்கு கொண்டு வர வேண்டும். அவர் அப்படி செய்யவில்லை என்றால் என் ஆடைகளை விற்றாவதும் நான் கோதுமை மாவின் விலையை குறைந்த விலைக்குக் கொண்டு வருவேன்.

முன்னாள் பிரதமர் இம்ரான் கான். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல்,  ஆட்சியில்  பொருளாதாரம் இக்கட்டான நிலைக்குச் சென்றுள்ளது.  என் உயிரைக் கொடுத்தாவது நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வேன் எனத் தெரிவித்துள்ளார்.