1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 21 ஆகஸ்ட் 2019 (16:20 IST)

கொலை செய்து சடலத்துடன் உல்லாசம் இருப்பேன் - குற்றவாளி ’திடுக்’ தகவல்

சமீபத்தில் ஆந்திர மாநிலம் சித்தூர் வட்டத்தைச் சேர்ந்த சரோஜம்மாள் ( 65)என்ற பெண்ணை யாரோ அம்மிக்கல்லை தலையில் போட்டுக் கொலை செய்துவிட்டனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் அரக்கோணம்  அடுத்த வெங்கடேசபுரம் பகுதியில் வசித்து வந்த ஆனந்தன் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்த மூக்குத்தி, தாலி போன்ற நகைகளை பார்த்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் ஆனந்தன் ( 35) ஏற்கனவே அரக்கோணத்தில் ஒரு பெண்ணின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்றுள்ளார்.
 
 பின்னர் அந்த சடலத்துடன் உல்லாசமாக இருந்துள்ளார்.பின் அந்த பெண்ணின் நகைகளை திருடி சென்றுள்ளார். தற்போது சரோஜம்மாள் இதே மாதிரி கொல்லப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில் , இதுகுறித்த விஷயத்தை அரக்கோணம் போலீஸாருக்கு நகரி போலீஸார் கூற, விசாரணை அடுத்தகட்டத்திற்குச் சென்றது.
 
அப்போது அனந்தன் போலீஸிடம் கூறியதாவதாவது : நான் இந்திராணி என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தேன். அவர் ரயில் விபத்தில் இறந்துவிட்டார். அவர் இறப்பதற்கு முன்னர் நிர்மலா என்ற பெண்னுடன் தகராறு இருந்ததால் அவரைக் கொல்ல வேண்டுமென சொல்லிக்கொண்டிருந்தார். அதனால் சில நாட்கள் கழித்து நிர்மலா வீட்டுக்குச் சென்றேன்.அங்கு அவரது அம்மாவை தக்கியதில் அவர் மயங்கிவிட்டார்.பின்னர் அம்மிக்கல்லை தூக்கி நிர்மலாவின் தலையில் போட்டு கொன்றேன். அந்த சடலத்துடன் உல்லாசமாக இருந்தேன். அதன்பின் நகைகளை திருடிச் சென்றுவிட்டேன் என்று கூறியுள்ளார்.
 
இதைக் கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது மேலும் விசாரணை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.