வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 12 மே 2018 (11:25 IST)

நான் சொன்னது மனோரமா ஆச்சியப்பா - அந்தர் பல்டி அடித்த செல்லூர் ராஜூ

ரஜினி ஆட்சியை பிடிக்க முடியாது, வேண்டுமானால் ஆச்சியை பிடிக்கலாம் என சர்ச்சைக் கருத்தை கூறிய நிலையில், நான் சொன்னது மனோரமா ஆச்சி என அந்தர் பல்டி அடித்துள்ளார் செல்லூர் ராஜூ
சமீபத்தில் நடைபெற்ற காலா இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த், நதிகள் இணைப்பே தனது வாழ்நாள் லட்சியம் எனத் தெரிவித்திருந்தார்.
 
இதுகுறித்து அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேட்டபோது, ரஜினியால் ஆட்சியை பிடிக்க முடியாது, வேண்டுமானால் காரைக்குடி ஆச்சியை வேண்டுமானால் பிடிக்கலாம் என கிண்டலடித்துப் பேசினார்,
ஆச்சி என்பது காரைக்குடி பகுதியில் வயது முதிர்ந்த பெண்களை குறிக்கும் சொல் என்பதால் அமைச்சரின் பேச்சு பெண்களை இழிவுபடுத்தியதாக இருப்பதாக காரைக்குடி நகரத்தார் சங்கத்தினர் அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் செல்லூர் ராஜு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 
இது குறித்து தனியார் தொலைக்காட்சிப் பேட்டியில் பதிலளித்த செல்லூர் ராஜூ, நான் சொன்னது காரைக்குடி ஆச்சியை அல்ல, ரஜினியுடன் சேர்ந்து நடித்த மனோரமா ஆச்சியைதான் என பிளேட்டையே திருப்பிப் போட்டுவிட்டார்.