திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 11 மே 2018 (10:01 IST)

ஓபிஎஸ்-ஐ ஒதுக்குகிறாரா ஈபிஎஸ்? அரசு விழாவுக்கு அழைப்பு இல்லை

அதிமுகவின் இரண்டு பிரிவுகளாக இருந்த ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணைந்து ஒன்றுபட்ட அதிமுகவாக மாறிவிட்டாலும், இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு நீடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் இரண்டு தரப்பினர்களும் இதனை மறுத்தனர். ஒன்றுபட்ட அதிமுக அதிக பலத்துடன் இருப்பதாக தெரிவித்தனர். சமீபத்தில் கூட ஜெயலலிதா நினைவு மண்டப பூஜையில் இருவரும் இணைந்து கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் கோவில்பட்டியில் இன்று நடைபெறும் அரசு விழா ஒன்றின் அழைப்பிதழில் ஓபிஎஸ் பெயர் இல்லை. செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களின் தலைமையில் நடைபெறும் கோவில்பட்டி நகராட்சிக்கான 2வது பைப்லைன் திட்ட பணிகளின் தொடக்க  விழா இன்று நடைபெறவுள்ளது. இந்த விழவில் முதல்வர் பழனிச்சாமி திட்டப்பணிகளை தொடக்கி வைப்பார் என்று அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஆனால் துணை முதல்வர் ஓபிஎஸ் பெயர் இந்த அழைப்பிதழில் இல்லை. அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், வேலுமணி, மணிகண்டன், பாஸ்கரன் உள்ளிட்ட பல அமைச்சர்களின் பெயர்கள் இந்த அழைப்பிதழில் இருக்கும் நிலையில் துணைமுதல்வர் ஓபிஎஸ் பெயர் மட்டும் இதில் மிஸ் ஆகியுள்ளது அதிமுகவினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனால் ஒபிஎஸ்-ஈபிஎஸ் இடையிலான மோதல் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால் இதனை அதிமுகவினர் மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்த்ககது.