திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: வெள்ளி, 11 மே 2018 (08:41 IST)

ரஜினியை ஊதி ஊதி கெடுத்துவிட வேண்டாம்: குருமூர்த்திக்கு ஜெயகுமார் அட்வைஸ்

ரஜினிகாந்த் அமைதியாக இருக்கின்றார். அவரை ஊதி ஊதி கெடுத்துவிட வேண்டாம் என்று ஆடிட்டரும் துக்ளக் ஆசிரியருமான குருமூர்த்திக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் அட்வைஸ் செய்துள்ளார்.
 
அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களை சந்தித்தபோது தமிழக அரசியலில் உள்ள வெற்றிடத்தை ரஜினிகாந்த் அவர்களால் மட்டுமே நிரப்ப முடியும் என்று ஆடிட்டர் குருமூர்த்தி கூறியது குறித்த கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜெயகுமார், ஆடிட்டர் குருமூர்த்தி தன்னுடைய கணக்கு வேலையை மட்டும் பார்த்து கொண்டிருந்தால் அனைவருக்கும் நல்லது. ஆடிட்டர் குருமூர்த்தி அரசியல் குருமூர்த்தி ஆக மாறக்கூடாது. சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல் பாவம், ரஜினிகாந்த் சும்மா இருக்கிறார். அவரை ஆடிட்டர் குருமூர்த்தி ஊதி ஊதி கெடுத்துவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்' என்று தெரிவித்தார். 
 
மேலும் ஆடிட்டர் குருமூர்த்தி அதிமுக ஆட்சி குறித்து என்ன சொன்னாலும் சரி, தமிழகத்தை பொறுத்தவரை எத்தனை தேர்தல் வந்தாலும் ஜெயலலிதா வழியில் செயல்பட்டு வரும் அ.தி.மு.க. தான் ஆட்சி கட்டிலில் அமரும், கோலோச்சும். கருத்துகளை யார் வேண்டுமானாலும் தெரிவிக்கலாம். ஆனால் மக்கள் தான் தீர்ப்பு வழங்குபவர்கள். கனவிலும், கற்பனை உலகத்திலும் இருப்பவர்களின் கருத்துக்கெல்லாம் பதில் சொல்லமுடியாது என்று கூறினார்.