1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : சனி, 24 டிசம்பர் 2016 (12:38 IST)

இந்த கும்பல் உன்னை கொலை செய்துவிடும் என அன்றே ஜெயலலிதாவிடம் சொன்னேன்: கீதா பரபரப்பு பேட்டி!

ஜெயலலிதாவிடம் இந்த கும்பல் உன்னை கொலை செய்துவிடும் என அன்றே சொன்னேன்: கீதா பரபரப்பு பேட்டி!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தோழி கீதா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் நூற்றுக்கு நூறு சதவீதம் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என கீதா பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.


 
 
இது தொடர்பாக தனியார் வார இதழ் ஒன்றுக்கு கீதா பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் கடைசியாக ஜெயலலிதாவை ஜெயிலில் சந்தித்ததாக கூறினார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா தரப்புடன் ஜெயலலிதா ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
 
சசிகலா தரப்பு செய்த தவறுக்காக ஜெயலலிதாவும் தண்டனை அனுபவித்தார். அப்போது ஜெயிலில் அவரை சந்தித்த நான் இந்த கும்பல் உன்னை ஒரு நாள் கொலை செய்துவிடும் என அவரது காதில் கூறினேன் என கூறினார் கீதா. எல்லோரும் இருந்ததால் தான் அவரது காதில் ரகசியமாக கூறினேன் என்றார் கீதா.