டாஸ்மாக் குறித்த ரஜினியின் கருத்தை ஆதரிக்கவில்லை: முக அழகிரியின் அறிவிப்பால் பரபரப்பு
கொரோனா வைரஸில் இருந்து மக்களை காப்பாற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு திடீரென டாஸ்மாக் கடைகளை திறந்து தனிமனித இடைவெளியை கேள்விக்குறியாக்கியதற்கு எதிர்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக நடிகர்களில் ரஜினிகாந்த், கமலஹாசன் கடுமையாக தங்கள் கண்டனங்களை டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளனர்
இந்த நிலையில் ரஜினியின் டுவீட்டுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. ஒரு சில அரசியல்வாதிகள் ரஜினியின் டுவிட்டை வேண்டுமென்றே விமர்சனம் செய்து தங்களது பெயர் தலைப்பு செய்திகளில் வரும் வகையில் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ரஜினியின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவராக கருதப்படும் முக அழகிரி ரஜினியின் டாஸ்மாக் டுவிட்டை ஆதரித்தது போன்ற ஒரு பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. ஆனால் இந்த பதிவு தன்னுடையது இல்லை என்றும் தன்னுடைய பெயரில் போலியாக வெளிவந்த கருத்து என்றும் முக அழகிரி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மதுக்கடைகளை மீண்டும் திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிடுங்கள் என்று நண்பர் ரஜினிகாந்த் கூறிய கருத்தை நான் ஆதரிப்பது போன்று என் படத்தோடு சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி வருகின்றனர். அதுகுறித்து நான் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. சமூக வலைதளங்களில் எந்தக் கணக்கும் எனக்கு இல்லை. அதை நான் பயன்படுத்தவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. முக அழகிரியின் இந்த அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது