1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 11 மே 2020 (08:13 IST)

சரக்குகள் திருடு போகும் அபாயம் - டாஸ்மாக் கடைகளுக்கு போலிஸ் பாதுகாப்பு!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மே 9 ஆம் தேதி முதல் மூடப்பட்ட நிலையில் இப்போது மதுரையில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு போலிஸ் பாதுகாப்பு விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் 42 நாட்களுக்குப் பின்னர் மே 7 ஆம் தேதி டாஸ்மாக் திறக்கப்பட்டது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில பகுதிகளை தவிர அனைத்து பகுதிகளிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் மதுக்கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணையில் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. ஊரடங்கு விதிமுறைகள் மதுக்கடைகளில் மீறப்படவில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து கடைகளில் வைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபாட்டில்கள் திருடுபோகும் அபாயம் இருப்பதால் மதுரையில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு சுழற்சி முறையில் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடை திறப்பு வழக்கு விசா ரணை முடியும் வரை கடைகளுக் குப் பாதுகாப்பு அளிக்கப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரி வித்தனர்.