இத்தீர்ப்பு நாட்டின் ஒற்றுமைக்கும், மக்களின் நலனுக்குமெதிரானது என அறுதியிட்டுக் கூறுகிறேன்.- சீமான்
ஞான வாபி வசூதியில் சென்று காசி விஸ்வ நாதரை வழிபட வேண்டுமென்று 5 பெண்கள் அளித்த மனு விசாரணைக்கு உகந்தது எனக் கூறியிருக்கும் வாரணாசி நீதிமன்றத்தின் தீர்ப்பானது அதிர்ச்சியளிக்கிறது என நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், 1991ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் சிறப்புச்சட்டம், 1947 ஆம் ஆண்டுக்கு முன்பு வழிபாட்டுத்தலங்கள் எந்த நிலைமையில் இருந்ததோ அதே நிலைமையே நீடிக்க வேண்டும் எனக்கூறியிருக்கும் நிலையில், அச்சட்டத்துக்கு முற்றிலும் நேர்மாறான வகையில் வழங்கப்பட்டிருக்கும்
ஞான வாபி மசூதியில் சென்று காசி விஸ்வநாதரை வழிபட வேண்டுமென்று ஐந்து பெண்கள் அளித்த மனு விசாரணைக்கு உகந்தது எனக் கூறியிருக்கும் வாரணாசி நீதிமன்றத்தின் தீர்ப்பானது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
இத்தீர்ப்பு நாட்டின் ஒற்றுமைக்கும், மக்களின் நலனுக்குமெதிரானது என அறுதியிட்டுக் கூறுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.