1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 10 ஜூலை 2024 (15:32 IST)

அண்ணாமலையின் உருவ பொம்மையை எரிப்பு.. காங்கிரஸ் போராட்டத்தால் பரபரப்பு..!

நெல்லையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்து காங்கிரசார் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
செல்வப்பெருந்தகை குறித்து அண்ணாமலை விமர்சித்ததை கண்டித்து நெல்லையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில் திடீரென அண்ணாமலையின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. உடனே உருவ பொம்மையை பறித்து, போலீசார் தீயை அணைத்தனர்.  
 
நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடந்து வரும் நிலையில் அண்ணாமலைக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி, 100க்கும் மேற்பட்டோர் போராட்டம் செய்து வருகின்றனர்.
 
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்ற வழக்குகளில் உடையவர் என்று அண்ணாமலை சமீபத்தில் கூறினார். அதற்கு என்ன ஆதாரம் என்று செல்வப்பெருந்தகை கூறிய போது தனது சமூக வலைதலை பக்கத்தில் செல்வப்பெருந்தகை மீது என்னென்ன வழக்குகள் இருக்கிறது என்பதை பட்டியலிட்டார். 
 
இந்த பட்டியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தான் அண்ணாமலைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் சார்பாக போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran