திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (15:19 IST)

''நான் ஒரு அரசுப் பள்ளி மாணவன்''...'சந்திரயான்-3' திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் வீடியோ வைரல்

Muthuvel
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான்- 3 விண்கலத்தை  நிலவுக்கு அனுப்பிய நிலையில்,  விக்ரம் லேண்டர் நேற்று வெற்றிகரமாகத்  நிலவில் தரையிறங்கியது. இதற்கு  உலக நாடுகள் இந்திய இஸ்ரோவுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் கூறி வருகின்றன.



இந்த நிலையில், ஒட்டுமொத்த இந்தியர்களும் இந்த சரித்திர நிகழ்வை கொண்டாடி வரும் நிலையில், சந்திரயான் -3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுக்கு சக விஞ்ஞானிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இன்று சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், ''எல்லோருக்கும் வணக்கம், என் பெயர் வீரமுத்துவேல். இந்த வாய்ப்பு கொடுத்த டாக்டர் மயில்சாமி அண்ணாத்துரைக்கு நன்றி. இப்ப நான் பெங்களூரில்  விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறேன். நான் பிறந்து வளர்ந்தது விழுப்புரத்தில்…எனது பள்ளிப் பருவம் ஒரு அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு வரை படித்தேன். பள்ளியில்  நான் ஒரு ஆவ்ரேஜ் மாணவன் ( சராசரி மாணவன்). அடுத்தென்ன படிக்கனும், எங்க படிக்கனும் என்ற ஐடியாவும் எனக்கில்லை. வீட்டில் யாருக்கும் கல்விசார்ந்த பேக்கிரவுண்ட் இல்லை. நண்பர்களுடன் சேர்ந்து டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்  சேர்ந்தேன்.