செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 8 மே 2019 (07:44 IST)

நான் இன்றும் பாஜகவில் தான் இருக்கிறேன்: காயத்ரி ரகுராம்

அரசியலில் இருந்து விலகினாலும் நான் இன்றும் பாஜகவில் தான் இருக்கின்றேன். எனது ஆதரவு என்றும் பாஜகவுக்குத்தான்  அதில் எந்த மாற்றமும் இல்லை என்று நடிகை காயத்ரி ரகுராம் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
 
நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான காயத்ரி ரகுராம் சமீபத்தில் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாகவும், ஒரு சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் அரசியலுக்கு வர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் நேற்று அளித்த பேட்டி ஒன்றில், 'தான் அரசியலில் இருந்து விலகியிருந்தாலும் என்றுமே பாஜக ஆதரவாளர்தான் என்றும், அரசியலை முழுமையாக கற்றுக்கொண்டு விரைவில் தீவிர அரசியலில் இறங்குவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
 
எதிர்க்கட்சிகளை குறை கூறுவதும், குற்றஞ்சாட்டுவதும் மட்டுமே அரசியல் இல்லை என்று கூறிய காயத்ரி, தான் அரசியலில் இன்னும் குழந்தையாக இருப்பதாகவும் இன்னும் நிறைய கிரவுண்ட் ஒர்க் செய்துவிட்டு அரசியலுக்கு வர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். 
 
தனக்கு எம்பி, எல்.எல்.ஏ ஆகும் ஆசை இல்லை என்றும், ஒருவேளை எதிர்காலத்தில் கட்சி வாய்ப்பு அளித்தால் அதனை ஏற்று தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறிய காயத்ரி ரகுராம், கட்சிக்காக வேலை செய்ய தான் காத்திருந்தும் மாநில தலைமை என்னை பயன்படுத்தி கொள்ளவில்லை என்றும் மேலும் அவர் கூறினார்.