உருவானது புதிய மாவட்டங்கள்! அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவதற்கான அறிவிப்புகள் ஏற்கனவே வந்த நிலையில் இன்று அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி வேலூர் மாவட்டத்தை பிரித்து வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என மூன்று புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் திருநெல்வேலியை பிரித்து தென்காசி, திருநெல்வேலி இரண்டு புதிய மாவட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
இதுதவிர காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாவட்டங்களுக்குட்பட்ட தாலுக்காக்கள் விவரம் அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.