திங்கள், 12 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 2 மே 2019 (17:45 IST)

திருமணத்தில் குடிகாரர் செய்த அலப்பறை : என்ன நடந்தது தெரியுமா ?

திருமணத்தில் குடிகாரர் செய்த அலப்பறை :  என்ன நடந்தது தெரியுமா ?
சாதாரண மக்களும் கூட தங்கள் கையில் உள்ள செல்போனில் மூலம்  டிக் டாக் ஆப்பினாள் எளிதாக தங்களை பிரபலப்படுத்திக் கொள்ளமுடியும். ஆனால் சில அநாகரிகமான வீடியோ  பதிவுகளால் மற்றவர்களுக்கு அதில் முகம் சுளிக்கும்படி ஆகிறது.
தற்போது சமூக வலைதளங்களி வைரலாக ஒரு வீடியோ பரவி வருகிறது. அந்த வீடியோவில் திருமணம் நடந்துகொண்டிருக்கும் போது அருகே இசைக்கச்சேரி நடந்துகொண்டிருந்தது. 
 
அங்கு மது அருந்திய குடிகாரர் ஒருவர் திடீரென்று மணமக்கள் நின்றிருந்த  மேடையில் ஏறி ஆடினார். அப்படியே ஆடிக்கொண்டே ஜிம்னாஸ்டிக் ஸ்டைலில் தலைகீழாய் கீழே பல்டி அடித்தார். அப்போது கீழே நின்றிருந்த ஒருவரின் தலையில் நங்கென அவரது கால்  பட்டது.  அதை யெல்லாம் மப்பு மண்டைக்கேறிய குடிகாரருக்கு தெரியவில்லை. 
 
ஆனால் நச்சென்று அடி வாங்கியவர் குடிகாரை செவினியிலேயே இரண்டு அப்பு அப்பினார். அதில் சுரணை இல்லாதவர் போல அடிவாங்கிவிட்டி சிறிது நேரம் கழித்து ஆடியபடியே அந்த நபரை நெஞ்சில் எட்டி உதைத்தார். இதை எதிர்பார்க்காத அந்த நபர் குடிகாரர் மேலும் அடித்துவிடுவாரோ என்ற பயத்தில் அமைதியாகிவிட்டார்.
திருமணத்தில் குடிகாரர் செய்த அலப்பறை :  என்ன நடந்தது தெரியுமா ?
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.
 
இதில் என்ன கவனிக்க வேண்டியது என்றால் குடிகாரர் மேடையில் ஆடும் போது கைதட்டி ரசித்தவரே அடிவாங்கிய நபர் தான் !