வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 20 மார்ச் 2019 (20:22 IST)

மனைவிக்கு பாலியல் தொல்லை: மாமனார் மீது புகார் கொடுக்க வந்த கணவர்

பெண்களுக்கு எதிரான் அபாலியல் அத்துமீரல்கல் அதிகமாகி உள்ல நிலையில், மனைவிக்கு மாமனார் பாலியல் தொல்லை கொடுக்கிறார் மற்றும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என கணவர் புகார் கொடுக்க வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
புதுகோட்டை மாவட்டத்தில் உள்ள தேக்காட்டூர் பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கணவனுடன் வந்திருந்த அந்த பெண் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரில் தெரிவித்திருந்ததாவது, 
 
கருத்துவேறுபாடு காரணமாக என் தந்தையும், தாயாரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர். எனக்கு இரண்டு அக்கா இருக்கிறார்கள். அவர்கள் திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். நானும் என் தந்தையும் மட்டும் ஊரில் வசித்து வந்தோம். 
 
தந்தை என்னிடம் தவறாக நடந்துகொண்டதால், என்னுடைய மூத்த அக்கா என்னை சென்னைக்கு அழைத்து வந்தார். ஆனால், கோயில் திருவிழா நேர்த்திக்கடன் என கூறி எனது தந்தை மீண்டும் என்னை ஊருக்கு அழைத்து வந்தார். 
 
ஊருக்கு வந்ததும் வீட்டில் வைத்து அடைத்து பாலியல் ரீதியாக சித்ரவதை செய்தார். இதை என அக்காவிற்கு தெரியப்படுத்த, அவள் மீண்டும் வந்து என்னை அழைத்து சென்றார். பின்னர் அக்காவின் கணவர் உறவினருக்கும் எனக்கு திருமணம் நடந்தது. 
 
இதனை தெரிந்துக்கொண்டதும் எனது தந்தை எங்கள் இருவரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டி வருகிறார். இதனால் எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.