வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 21 மார்ச் 2020 (11:00 IST)

போதையில் கணவன்… தூக்கு மாட்டிக்கொண்ட மனைவி – பிறகு நடந்த விபரீதம் !

கடலூர் மாவட்டத்தில் மனைவி தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டதால் அதிர்ச்சியான கணவன் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு மகேஸ்வரி என்ற பெண்ணோடு கடந்த 8 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடந்துள்ளது. இவர்கள் இருவரும் பெற்றோரோடு சேர்ந்து வாழாமல் தனித்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் மணிகண்டன் அதிகமாகக் குடிப்பதால் இருவருக்கும் இடையே அதிகமாக தகராறு எழுந்துள்ளது.

இந்நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து இருவரும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது இருவரும் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். இதையடுத்து போலீஸாருக்கு தகவல் சொல்லப்பட்டது அவர்கள் வந்து நடத்திட்ய விசாரணையில் ‘மனைவி சடலமாகக் கீழே கிடந்துள்ளார். கணவர் தூக்கில் தொங்கிய படி கிடந்துள்ளார். இதனால் முதலில் மனைவி தூக்கில் தொங்கி இருக்க வேண்டும். அப்போது போதையில் மயங்கிய நிலையில் மணிகண்டன் இருந்திருக்க வேண்டும்.

பின்னர் நள்ளிரவில் போதை தெளிந்து மணிகண்டன் விழித்துப் பார்த்து அதிர்ச்சியாகி, மனைவியைக் கீழே இறக்கி தானும் அந்த துப்பட்டாவில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம்’ என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.