செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 30 ஜூலை 2019 (15:56 IST)

தண்ணி காட்டிய உமா மகேஸ்வரி கொலை கேஸ்: போலீசார் துப்பு துலக்கியது எப்படி?

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் போலீசார் கொலையாளியை எப்படி கண்டுபிடித்தார் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த 23 ஆம் தேதி முன்னாள் நெல்லை மேயர் உமா மகேஷ்வரி, அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கொடூர முறையில் கொலை செய்யப்பட்டனர். பட்டப் பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் மக்களை அதிர்ச்சியாக்கியது. 
 
உடனடியாக போலீசார் தனிப்படை அமைத்து வழக்கை விசாரித்த போது முதலில் பெரிதாக் எந்த க்ளூவும் கிடைக்கவில்லை. உமா மகேஸ்வரி வீட்டில் சிசிடிவி கேமரா இல்லாதது போலீஸாருக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. கொலையோடு நகையும் திருடப்பட்டது வழக்கை திசை திருப்பவதாய் இருந்தது. 
ஆனால் உமா மகேஸ்வரி வீட்டில் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்த சிசிடிவி கேமரா கொலையாளியை நெருங்க முக்கிய துப்புசீட்டாக இருந்தது. அதன்படி சந்தேகத்தின் பெயரில் சீனியம்மாள் என்பரை போலீஸார் விசாரித்தனர். அதுவும் வேலைக்கு ஆகாததால் செல்போன் அழைப்புகளை ஆராய துவங்கினர். 
 
அப்போது குறிப்பிட்ட எண் ஒன்றில் இருந்து அந்த பகுதிக்கு அதிக போன்கல் வந்திருந்தது தெரியவந்தது. அதேபோல் அந்த பகுதியில் ஒரு ஸ்கார்பியோ கார் ஒன்றும் இருந்துள்ளது. இவை இரண்டும்தான் போலீஸார் கொலையாளியை பிடிக்க உதவியுள்ளது. 
ஆம், கார் உரிமையாளரும், அந்த மொபைல் நம்பரின் உரிமையாளரும் ஒரே நபர். அந்த நபர்தான் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன். தடையம் இல்லாமல் தண்ணி காட்டிய வழக்கில் போலீஸார் கார்த்திகேயனை கைது செய்தது இப்படித்தான் என செய்திகள் வெளியாகியுள்ளது.