வெள்ளி, 26 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Modified: வெள்ளி, 26 டிசம்பர் 2025 (14:38 IST)

எம்ஜிஆரை பற்றி கிசுகிசு எழுதிய பத்திரிக்கையாளர்! ராமாவரம் தோட்டத்தில் நடந்த அந்த சம்பவம்

mgr
மக்கள் மனதில் என்றும் செல்வாக்குடன் திகழ்ந்திருப்பவர் மக்கள் திலகம் எம்ஜிஆர். இவருக்கு பல பெயர்கள் இருக்கின்றன. அரசியலிலும் சினிமாவிலும் ஒரு பெரிய ஆளுமையாக வலம் வந்தார். சினிமாவிற்குள் நுழைய பல போராட்டங்களை கடந்து வந்தார் எம்ஜிஆர். அதேபோல அரசியலில் தனது ஆதிக்கத்தை எளிதாக அவர் அடையவில்லை. சாதாரண தொண்டனாக இருந்துதான் மாபெரும் தலைவராக மாறினார் எம்ஜிஆர்.

எம்ஜிஆர் என்றாலே அவர் மக்களுக்காக செய்த தொண்டுதான் நியாபகத்திற்கு வரும். இன்னொரு விஷயம் ராமாவரம் தோட்டம் நியாபகத்துக்கு வரும். ஏனெனில் யாராவது தவறு செய்து எம்ஜிஆருக்கு தெரியவந்தால் உடனே அவர்கள் ராமாவரம் தோட்டத்திற்கு வரவழைக்கப்பட்டு சவுக்கடி வாங்கிவிட்டுத்தான் போவார்கள் என்ற ஒரு செய்தி இருக்கிறது. இப்படி பல பேரை எம்ஜிஆர் தண்டித்து அனுப்பியிருக்கிறார் என்றெல்லாம் கூறுகிறார்கள்.


இப்படி ஒரு விஷயத்தை பற்றி இயக்குனர் பாரதி கண்ணன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஒரு சமயம் எம்ஜிஆரை பற்றி ஒரு பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் கிசுகிசு ஒன்றை எழுதிவிட்டாராம். இதை எம்ஜிஆர் தொண்டர்கள் எம்ஜிஆரிடம் கூற, உடனே எம்ஜிஆர் அந்த பத்திரிக்கையாளரை ராமாவரம் தோட்டத்திற்கு வர சொல்லியிருக்கிறார். இது அந்த பத்திரிக்கையாளருக்கும் பெரும் பீதியை கிளப்பியிருக்கிறது.

ஆனால் எம்ஜிஆர் அதை பற்றி எதுவும் கேட்கவில்லையாம். அந்த பத்திரிக்கையாளர் ‘மன்னிச்சிடுங்க தலைவரே! ஏதோ தெரியாம எழுதிவிட்டேன்’ என்று கூறியிருக்கிறார். அதற்கு எம்ஜிஆர் ‘அதெல்லாம் இருக்கட்டும், அதை பற்றி பேச நான் அழைக்கவில்லை. அது பத்திரிக்கையாளர்களின் சுதந்திரம். அதை நான் தடுக்கமாட்டேன். ரிக்‌ஷாகாரன் படத்தின் ப்ரஸ் மீட் ஒன்றை ஏற்பாடு செய்ய போகிறேன். அதை நீங்கள்தான் தலைமை தாங்கி நடத்திக் கொடுக்க வேண்டும்’ என எம்ஜிஆர் கூறியிருக்கிறார்,

அதற்கு அந்த பத்திரிக்கையாளர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இருந்தாலும் ‘மன்னிச்சுடுங்க தலைவரே’ என மாறி மாறி சொல்ல அதை எம்ஜிஆர் கண்டுகொள்ளவே இல்லையாம். ‘இந்த விழாவை நடத்திக் கொடுக்க வேண்டும் என கூறி ஒரு பணக்கட்டு ஒன்றை அந்த பத்திரிக்கையாளர் கையில் கொடுத்து, வரும் பத்திரிக்கையாளர்களுக்கு கிஃப்ட் மற்றும் மற்ற செலவுகளை பார்த்துக் கொள்ளுங்கள்’ என கூறியிருக்கிறார்,
.

சொன்னதை போல ரிக்‌ஷாக்காரன் படத்தின் பிரஸ் மீட் எல்லாம் நடந்துமுடிந்தது. அதன் பிறகு எம்ஜிஆர் மேக்கப் அறையில் இருக்கிறார் என அந்த பத்திரிக்கையாளருக்கு செய்தி போக அவரும் அந்த மேக்கப் அறைக்குள் போயிருக்கிறார். இதற்குள் அந்த பத்திரிக்கையாளர் எம்ஜிஆரை பற்றி நல்ல விதமாக பத்திரிக்கையிலும் எழுதிவிட்டாராம். அந்த மேக்கப் அறைக்குள் எம்ஜிஆரின் உதவியாளர்கள் 5 பேர் வந்து ‘ஏன்டா எங்க தலைவரை பற்றியா தப்பா எழுதுற’னு சொல்லி அடி துவைத்து எடுத்திருக்கிறார்கள். ஆனால் இந்த விஷயம் எம்ஜிஆருக்கு தெரியுமா தெரியாதா என்பது பற்றி இதுவரை யாருக்கும் தெரியாது என பாரதிகண்ணன் கூறியுள்ளார்.