செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 16 அக்டோபர் 2024 (07:26 IST)

சென்னையில் எத்தனை சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன? எந்தெந்த சுரங்கப்பாதைகள்?

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், சில சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படவில்லை என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ஆனால், அதே நேரத்தில் மாநகராட்சி ஊழியர்கள் சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளதால், அவ்வப்போது சுரங்கப்பாதைகள் மீண்டும் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை நிலவரப்படி, சென்னையில் 5 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டு இருந்த நிலையில், தற்போது மூன்று சுரங்கப்பாதைகள் தவிர மற்ற அனைத்து சுரங்கப்பாதைகளும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கணேஷ்புரம், ஸ்டான்லி நகர், பெரம்பூர் சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், அங்கு மழை நீரை அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த மூன்று சுரங்கப்பாதைகள் தவிர, சென்னையில் மீதியுள்ள அனைத்து சுரங்கப்பாதைகளும் போக்குவரத்துக்காக உள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும், அவ்வப்போது மாநகராட்சி தனது சமூக வலைத்தளத்தில் சுரங்கப்பாதைகள் திறக்கப்படுவதும் மூடப்படுவதுமான தகவல்களை வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva