திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 17 அக்டோபர் 2024 (12:12 IST)

தீபாவளி பண்டிக்கைக்கு எத்தனை சிறப்பு பேருந்துகள்? போக்குவரத்து துறை முக்கிய ஆலோசனை..!

தீபாவளி பண்டிக்கைக்கு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழகம் முழுவதும் 16,500 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம் என போக்குவரத்து துறை திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தீபாவளி சிறப்பு பேருந்துகள் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் அக்டோபர் 19ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாகவும், ஆலோசனை நடத்திய பின்னர் சிறப்பு பேருந்துகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
இந்த ஆலோசனை போக்குவரத்து துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆலோசனையில் கலந்து கொள்கின்றனர். மேலும் தீபாவளியை முன்னிட்டு 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை திட்டம் என்றும், சென்னையில் இருந்து மட்டும் 10,500 பேருந்துகள் இயக்கவும் திட்டம் என்றும் கூறப்படுகிறது.
 
5.5 லட்சம் மக்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய வாய்ப்பு எனவும் அதற்கான பணிகளை திட்டமிட இருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran