செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 16 அக்டோபர் 2024 (07:33 IST)

சென்னை விமான நிலையத்திற்கு வர மறுக்கும் ஆட்டோ, கார்.. அரசின் அதிரடி நடவடிக்கை..!

சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு வாடகை வாகனங்கள் கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்த நிலையில், அவ்வழியாக செல்லும் அரசுப் பேருந்துகள் விமானங்களின் வருகை நேரத்திற்கு ஏற்றவாறு விமான நிலையத்திற்கு உள்ளே சென்று பயணிகளை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
கனமழை காரணமாக தனியார் வாடகை கார்கள் சவாரி எடுக்க மறுப்பதாக விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் புகார் தெரிவித்திருந்தனர். நாளையும் இதே போல் மாநகரப் பேருந்துகள் சென்னை விமான நிலையத்திற்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னை விமான நிலையத்திற்குள் சில குறிப்பிட்ட பேருந்துகள் உள்ளே சென்று விமான பயணிகளை ஏற்றுக் கொண்டு வரும் நடவடிக்கையை தமிழக அரசு செய்துள்ள நிலையில் தமிழக அரசுக்கு விமான பயலுகளா பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
 
இதுகுறித்து கருத்து தெரிவித்த பயணிகள் விமான பயணிகளுக்கு இந்த பேருந்து சேவை பெரும் உதவியா இருக்கும்.. இது தொடர்ந்தால் இன்னும் நல்லாருக்கும்.." என்று தெரிவித்தனர்.
 
Edited by Siva