திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 10 மார்ச் 2024 (14:58 IST)

த.வெ.கவில் இத்தனை லட்சம் பேரா..? அதிர்ச்சி ரிப்போர்ட்.!!

Vijay
தமிழக வெற்றிக் கழகத்தில் 50 லட்சம் பேர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கென புதிய செயலி அறிமுகம் செய்யப்படும் என்றும், அதன் மூலமே உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
கடந்த 8 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை நடிகரும், அக்கட்சியின் தலைவருமான விஜய் அறிமுகப்படுத்தினார். மேலும், மே மாதத்திற்குள் அதிக அளவு உறுப்பினர்களை சேர்க்கவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளை 100 மாவட்டங்களாக பிரித்து பொறுப்புகள் வழங்க தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் 50 லட்சம் பேர் இணைந்துள்ளதாக உறுப்பினர் சேர்க்கை அணியின் மாநில துணைச் செயலாளர் கல்லணை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

Whatsapp, Telegram மற்றும் தொலைபேசி எண் மூலம் விஜய் ரசிகர்கள் உறுப்பினர்களாக இணைந்து வருகின்றனர். மூன்றே நாட்களில் தமிழக வெற்றிக் கழகத்தில் 50 லட்சம் பேர் இணைந்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.