1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 4 செப்டம்பர் 2021 (10:37 IST)

உச்சம் தொடும் தங்கம் - ஒரே நாளில் ரூ.352 உயர்வு!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.35,968க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் சென்னையில் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 352 தங்கம் விலை உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம். 
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.35,968க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.44 உயர்ந்து ரூ.4,496க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.60 உயர்ந்து ரூ.69.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.