செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 4 செப்டம்பர் 2021 (11:47 IST)

திமுக ஆட்சியில் ரூ.641 கோடி ஆக்கிரமிப்பு கோயில் நிலங்கள் மீட்பு

திமுக ஆட்சியமைத்து தற்போது வரை ரூ.641 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது என தகவல்.
 
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் அறநிலையத்துறை அமைச்சராக சேகர் பாபு நியமிக்கப்பட்டார். அதை தொடர்ந்து அறநிலையத்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன, கோவில் விவரங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடங்கி கோவில் நிலங்களை மீட்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
 
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்து 70 நாட்களுக்கு அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துகள், நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது வரை ரூ.641 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. 203 ஏக்கர் வேளாண் நிலங்களும் 170 கிரவுண்ட் அளவிலான காலி மனைகளும் மீட்கப்பட்டு திருக்கோயில்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.