1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 17 மே 2017 (16:20 IST)

அனல் காற்று வீசும்.. மழை பெய்யும் - வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் இன்னும் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.


 

 
சென்னையில் இன்று அதிகாலை முதல் காலை 8 மணிவரை வெயில் தென்படாமல், வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் மழையும் பெய்தது. 
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்தர் “ஆந்திரக்கடல் பகுதிகளில் வெப்பக்காற்று வீசுவதால், வடதமிழகத்தின் உள்பகுதிகளில் இன்னும் 2 நட்களுக்கு அனல் காற்று வீசும். இந்த வெப்பச்சலனத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். சென்னையில் சில பகுதிகளில் லேசான தூறல் மட்டுமே காணப்படும்” என அவர் தெரிவித்தார்.