1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. CPM Protests Near US Consulate in Chennai Over Venezuela Crisis: Several Arrested

சென்னை அமெரிக்க தூதரகத்தை திடீரென முற்றுகையிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்.. என்ன காரணம்?

சென்னை செய்திகள்
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
வெனிசுலா நாட்டின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை கொள்ளையடிக்கும் நோக்கில், அந்நாட்டு அதிபரையும் அவரது மனைவியையும் அமெரிக்க அதிபர் கைது செய்துள்ளதாக கூறி, கம்யூனிஸ்ட் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
அமெரிக்காவின் இந்த ஏகாதிபத்தியப் போக்கை விடுத்து, மற்ற நாடுகளின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த முற்றுகை போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டு குழுத் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். 
 
அமெரிக்கத் தூதரகத்தை சுற்றிப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தப் போராட்டம் காரணமாக அண்ணா சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
தூத்துக்குடி - சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டி தடம் புரண்டது.. என்ன நடந்தது?