செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 3 ஏப்ரல் 2021 (08:39 IST)

அடுத்த சில தினங்களில் அனல்காற்று வீசும்… வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் அடுத்த சில தினங்களில் சில பகுதிகளில் அனல்காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் இப்போதே வாட்ட துவங்கிவிட்டது. பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியுள்ளன. இந்நிலையில் சில பகுதிகளில் அனல்காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை செய்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக தென் தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.