1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 27 அக்டோபர் 2016 (16:03 IST)

மருத்துவமனையில் இருக்கும் முதல்வருக்கு பூஜை நடத்திய எம்எல்ஏ மருத்துவமனையில் அனுமதி!

மருத்துவமனையில் இருக்கும் முதல்வருக்கு பூஜை நடத்திய எம்எல்ஏ மருத்துவமனையில் அனுமதி!

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணம் பெற்று வீடு திரும்ப தமிழகம் முழுவதும் அதிமுகவினர் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தி வருகின்றனர்.


 
 
இந்நிலையில் ஆம்பூர் தொகுதி எம்எல்ஏ பாலசுப்பிரமணியன் வடச்சேரி கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய சிறப்பு பூஜை ஒன்றை நடத்தினார்.
 
இந்த பூஜையின் போது திடீரென புகுந்த தேனீக்கள் கூட்டம், எம்எல்ஏ உட்பட அனைவரையும் சரமாரியாக கொட்டியது. இதனால் எம்எல்ஏ உட்பட 25 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.