வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 26 டிசம்பர் 2018 (17:51 IST)

கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. ரத்தம் கொடுத்தவர் தற்கொலை முயற்சி!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சமீபத்தில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றியதால் பெரும் சர்ச்சையாகியுள்ளது. அவருடைய வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் இருக்க அவர் தற்போது மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயர் சிகிச்சை பெற்று வருகிறார்.

கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்தம் ஏற்றிய அரசு மருத்துவமனை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கர்ப்பிணி பெண்ணுக்கு உரிய இழப்பீடு மற்றும் உயர் சிகிச்சை அளிக்கப்படும் என்றும், அவருடைய தகுதிக்கு ஏற்ப அரசு பணியும் வழங்கப்படும் என்றும் சுகாதார செயலாளர் அறிவித்துள்ளார். இருப்பினும் அரசு வேலை உள்பட எந்தவித நிவாரணமும்  வேண்டாம் என்றும், தனது மனைவிக்கு உயர் சிகிச்சை அளிக்க அரசு வழி செய்தால் போதும் என்றும் அவருடைய கணவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி உள்ள ரத்தம் கொடுத்த ரமேஷ் என்பவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்ச் செய்திகள் வெளிவந்துள்ளது.