புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 7 ஆகஸ்ட் 2021 (12:34 IST)

கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு டிசி தர மறுக்க கூடாது - ஐகோர்ட் உத்தரவு!

கொரோனா பேரிடரால் தனியார் பள்ளிகள், குறிப்பிட்ட தொகை கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தொகையை மாணவர்கள் செலுத்தவில்லை என்றால் அவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்க கூடாது என தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
மேலும் மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து புகார் வரும் பட்சத்தில், தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக விசாரிக்கப்படும் என தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.