உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனாவில் இருந்து குணமடைந்தார்...
உலக அளவில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடிக்குமேல் அதிகரித்துள்ளது. சுமார் 6 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9.30லட்சத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரொனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொரொனா பணிகளில் ஈடுபட்டிருந்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவரது கட்சியனர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.
இந்நிலையில் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீட்டிற்கு திரும்பியதாக தகவல்கள் வெளியாகிறது.