ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 17 ஜூலை 2023 (08:35 IST)

மீண்டும் உயர்ந்த தக்காளி விலை! எப்போதான் குறையும்? – இன்றைய நிலவரம்!

Tomato
கிடுகிடுவென விலை உயர்ந்த தக்காளில் கடந்த சில நாட்களாக சற்று விலை குறைந்த நிலையில் இன்று மீண்டும் விலை அதிகரித்துள்ளது.



வட மாநிலங்களில் பல பகுதிகளில் கனமழை, வெள்ளம் காரணமாக தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் தக்காளி விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. சில மாநிலங்களில் தக்காளி விலை ரூ.250 வரை உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டிலும் கடந்த சில வாரங்களாக தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக ரூ.140 வரை விலை உயர்ந்த தக்காளில் நாளுக்கு நாள் இருப்பை வைத்து விலை ஏற்றம் இறக்கமாக விற்பனையாகி வருகிறது. கடந்த சில நாட்களாக மெல்ல விலை குறைந்து வந்த தக்காளி இன்று ரூ.10 விலை உயர்ந்து கிலோ ரூ.120க்கு விற்பனையாகி வருகிறது.

தக்காளி வரத்து எப்போது சீராகும், விலை எப்போது குறையும் என மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

Edit by Prasanth.K