ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2016 (13:46 IST)

இனி பொதுமக்களை ஏமாற்ற முடியாது!

ரேஷன் கடைகளில் ஸ்டாக் இல்லை என்று பல முறை பொதுமக்களிடம் பொய் கூறி திருப்பி அனுப்பும் வேலையை பல ரேஷன் கடைக்காரர்கள் செய்வதாக புகார் வருகிறது.


 


இதை தடுக்க, தமிழக அரசு SMS யுக்தியை அறிமுக படுத்தியதுள்ளது பலருக்கும் தெரியாது. 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216 ஆகிய ஏதோ ஒரு எண்ணிற்கு, PDS என்று டைப் செய்து, இடைவெளி விட்டு, உங்கள் மாவட்டத்தின் குறியீட்டு எண்ணை டைப் செய்து, இடைவெளி விட்டு, உங்கள் பகுதியின் ரேஷன் கடை எண்ணை டைப் செய்து SMS அனுப்பினால், சில நொடிகளில், உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் எவ்வளவு ஸ்டாக் இருக்கிறது என்று உங்களுக்கு SMS வந்துவிடும்.

மாவட்டதின் குறியீடும், ரேஷன் கடை எண்ணும் உங்கள் ரேஷன் அட்டையை பார்த்து நீங்கள் தெரிந்துக்கொள்ள முடியும். எடுத்துக்காட்டிற்கு 05/A/0757090 என்று ரேஷன் அட்டையில் அச்சிடப்பட்டிருக்கும் எண்ணில் 05 என்பது மாவட்டத்தின் குறியீடு. ரேஷன் கடையின் குறியீட்டு எண், ரேஷன் அட்டையின் அடியில் இருக்கும்.