வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 13 ஜூலை 2016 (20:26 IST)

ஹெல்மெட் அணிவதை வலியுறுத்தி பேரணி

கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஒட்ட வேண்டுமென்பதை வலியுறுத்தியும், இதை மக்களிடம் சென்று சேர வலியுறுத்தி கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஹெல்மெட் பேரணியை மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இந்த பேரணியில் தலைக்கவசம் உயிர்கவசம், சாலை விதிகளை கடைபிடிப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பாதாகைகள் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. மேலும் இந்த பேரணியில் காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறையை சார்ந்த ஏராளமான காவலர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் ஏராளமானோர் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் பிரச்சாரம் செய்தனர்.

மேலும் இதை தொடர்ந்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட சாலை பாதுகாப்பு பேரணியையும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே துவக்கி வைத்தார்.

இப்பேரணியில் ஏராளமான மாணவ, மாணவிகள் சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் பொருட்டு பதாகைகள் ஏந்தியும், முழக்கங்கள் எழுப்பியும் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அரசு கலைக்கல்லூரி வரை ஊர்வலமாக நடந்தே சென்றனர்.