வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 28 மே 2024 (08:20 IST)

தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையே ஹெலிகாப்டர் சேவை: டிட்கோ நிர்வாக இயக்குனர் தகவல்..!

helicopter
தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையே ஹெலிகாப்டர் சேவை விரைவில் தொடங்கப்படும் என தமிழ்நாடு தொடர்ச்சி வழங்க வளர்ச்சி தொழில் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் சந்திப் நந்தூரி என்பவர் தெரிவித்துள்ளார். 
 
மத்திய அரசின் தேசிய சிவில் விமான போக்குவரத்து கொள்கை மற்றும் ஹெலிகாப்டர் கொள்கை மூலம் தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஹெலிப்பேடுகள் மறு சீரமைப்பு பணி நடைபெற்று வருவதாகவும் 80க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்படாத ஹெலிப்பேடுகள் சீரமைப்பு செய்தவுடன் ஹெலிகாப்டர் சேவையை வழங்குவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
 
இதன் மூலம் பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் குறைந்த நேரத்தில் வான்வழி பயணம் செய்யலாம் என்றும் அவசரகால மருத்துவ சேவைகள் சுற்றுலா உள்ளிட்டவற்றுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் இந்த திட்டம் படிப்படியாக தமிழகத்தின் முக்கிய நகரங்களில்  செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
சென்னை, மதுரை, கோவை உள்பட முக்கிய நகரங்களுக்கு இடையே விரைவில் ஹெலிகாப்டர் சேவை தொடங்க இருப்பது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva